உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைக்கிராம மருத்துவர் செவிலியர்களுக்கு பயிற்சி

மலைக்கிராம மருத்துவர் செவிலியர்களுக்கு பயிற்சி

சேலம், டிச. 21-சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நோய் குறியியல் துறை சார்பில், ஹீமோகுளோபினாபதிசில் தலசீமியா, சிக்கல் செல் அனுமியா நோய் கண்டறிவதற்கான இரு நாள் பயிலரங்கம் நேற்று நிறைவு பெற்றது. தேசிய நலக்குழுமம் சார்பில் நடந்த பயிலரங்கத்துக்கு, நோய் குறியியல் துறை தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். பொது மருத்துவத்துறை தலைவர் சுரேஷ்கண்ணா, குழந்தைகள் சிகிச்சைத்துறை பேராசிரியர் குமரவேல், உயிர் வேதியியல் துறை பேராசிரியை பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர்.இதில் நோய் பாதிப்பை கண்டறியும் முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மலைப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர், ரத்த பரிசோதனை கூட ஆய்வர்கள் பயிற்சி பெற்றனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தாருடன் கலந்துரையாடல் நடந்தது. மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ