உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மல்பெரி சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

மல்பெரி சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், 'பட்டு வளர்ச்சி துறையில் மல்பெரி சாகுபடி, வெண்பட்டு புழு வளர்ப்பு' தலைப்பில் உள் மாவட்ட அளவில் விவசாயிகள் பயிற்சி நேற்று நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். பட்டு விவசாயிகளுக்கான மல்பெரி தோட்ட பராமரிப்பு, உயிர் உரங்கள், பசுந்தாள் உரம் இடுதல், இலைப்பேன் கட்டுப்படுத்தும் முறை, புழு வளர்ப்பு மனையில் கிருமி நீக்கம் செய்தல் மற்றும் பட்டுக்கூடு அறுவடை குறித்து, பட்டு ஆய்வாளர் ராமசாமி, பட்டு இளநிலை ஆய்வாளர் கலைமதி ஆகியோர், தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர். அட்மா திட்ட செயல்பாடுகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் முக்கியத்துவம் குறித்து, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி விளக்கம் அளித்தார். பல்துறை அலுவலர்கள், துறை சார்ந்த மானியங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை