உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்

தலைவாசல்:கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, நேற்று, தலைவாசலில் பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் மோகனசுந்தரம் தலைமை வகித்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நோக்கம், திருத்த பணி, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணி, படிவம் பெறுதல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் பணி, வாக்காளர் சேர்த்தல், நீக்கல் படிவம் வழங்கும் முறை குறித்து எடுத்துரைத்தார். தலைவாசல் தாசில்தார் பாலாஜி, தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை