போக்குவரத்து தொழிலாளர் 12ம் நாளாக போராட்டம்
சேலம், சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு தொழிலாளர்கள் சார்பில், சேலம் புதுபஸ் ஸ்டாண்ட் அருகே, மெய்யனுார் பணிமனை முன், 12ம் நாளாக நேற்று, தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள், தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தல்; ஏற்றுக்கொண்டபடி, 15வது ஊதிய ஒப்பந்த நிலுவையை உடனே வழங்குதல்; 25 மாத நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போக்குவரத்து மண்டல பொதுச்செயலர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க மாநில நிர்வாகி மணிமுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.