தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிற்சி பெறும் பழங்குடி மாணவர்கள்
மல்லுார்: கடந்த, 9 மாதங்களாக, தமிழகம் முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியின மாணவ, மாணவியர் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி வகுப்பு, பழங்குடியின துறை மூலம், சேலம் மாவட்டம் மல்லுாரில் உள்ள, தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், கடந்த டிச., 23 முதல் நடந்து வருகிறது. அதில் பிளஸ் 2 படிக்கும் பழங்குடி மாணவ, மாணவியர், 265 பேர், மேற்படிப்புக்கு, ஜே.இ.இ., மற்றும் 'நீட்' தேர்வில் வெற்றி பெற பங்கேற்றுள்ளனர்.கடந்த, 25ல், தமிழக அரசு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அமைச்சர் மதிவேந்தன், பயிற்சி வகுப்பை பார்வையிட்டு, மாணவ, மாணவியருடன், அவரது பிறந்த நாளை, 'கேக்' வெட்டி கொண்டாடினார். முன்னதாக அமைச்சர், பழங்குடியின நல துறை இயக்குனர் அண்ணாதுரைக்கு, பூங்கொத்து கொடுத்து, பாலிடெக்னிக் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். துறை இணை இயக்குனர் சுமதி, சேலம் மாவட்ட பழங்குடியின திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் மற்றும் பாலிடெக்னிக் செயலர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன், நிர்வாக உறுப்பினர்கள், முதல்வர் உள்பட பலர் பங்கேற்றனர்.