உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரவள்ளி தொடர்பாக நாளை முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி தொடர்பாக நாளை முத்தரப்பு கூட்டம்

சேலம் :சேலம் சேகோசர்வ் செயலாட்சியர் கீர்த்திபிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம், நாளை, (18) காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் பிருந்தாதேவி, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர், சேகோசர்வ் செயலாட்சியர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் துணை இயக்குனர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !