உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாத்துக்குடி டிரைவர் சேலத்தில் மர்மச்சாவு

துாத்துக்குடி டிரைவர் சேலத்தில் மர்மச்சாவு

சேலம்: துாத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 35. 'ஆக்டிங்' டிரைவராக பணிபுரிந்தார். இவர் கடந்த, 10ல், சேலம், மெய்யனுார், ராம் நகர் அருகே உள்ள காலி இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சூரமங்கலம் போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். கோபாலகிருஷ்ணனுக்கு கன்னம் வீங்கி, சிராய்ப்பு உள்ளதால், யாராவது தாக்கினரா, எதற்காக சேலம் வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை