மேலும் செய்திகள்
தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
த.வெ.க.,வினர்அன்னதானம் வழங்கல்சேலம்:அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை ஒட்டி, சேலம், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் அருகே அவரது படத்துக்கு, சேலம் மத்திய மாவட்ட த.வெ.க., சார்பில், அதன் நிர்வாகிகள் நேற்று மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலர் பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் மல்லுாரில், சேலம் தெற்கு மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமையில் அக்கட்சியினர், அஞ்சலை அம்மாள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இளைஞரணி மோகன்ராஜ், வீரபாண்டி ஒன்றிய செயலர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில், தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில், மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர், அஞ்சலை அம்மாள் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
15-Feb-2025