மேலும் செய்திகள்
வாகனம் மோதி மூதாட்டி பலி
22-Apr-2025
விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி
09-May-2025
சேலம்: சேலம், தளவாய்பட்டியை சேர்ந்த வடக்கு ஒன்றிய தி.மு.க., பொருளாளர் சசிக்குமார். இவரது மகன் சாரதி, 22. சேலம், தாதகாப்பட்டி கேட்டைச் சேர்ந்த அ.தி.மு.க., கொண்டலாம்பட்டி மாணவரணி துணை செயலர் கோபாலகிருஷ்ணன் மகள் சாருபிரியா, 22. இவரும், சாரதியும், மாமாங்கத்தில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, பணி முடிந்த பின், யமஹா எம்.டி., பைக்கில், சாருபிரியாவை அழைத்துக்கொண்டு, ஹெல்மெட் அணிந்து சாரதி புறப்பட்டார். திருவாக்கவுண்டனுார் பைபாஸ் சந்திப்பு சர்வீஸ் சாலையில், 3:50 மணிக்கு வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் பின்பக்கம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சாரதி, சாருபிரியா அதே இடத்தில் இறந்தனர். சூரமங்கலம் போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.
22-Apr-2025
09-May-2025