சிறுமிகளை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் 2 பேருக்கு காப்பு
ஆத்துார், ஆத்துாரை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிக்கிறார். இவரது உறவினர், 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி. இருவரும் கடந்த, 7ல் மாயமாகினர். பெற்றோர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படையினர், மாணவிகளை தேடினர்.இந்நிலையில் துாத்துக்குடி, திருச்செந்துாரில் இருந்த, மாணவிகளை போலீசார் மீட்டனர். விசாரணையில், ஆத்துார், அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த மணிகண்டன், 25, மாரிமுத்து சாலையை சேர்ந்த கவுதம், 22, காதலிப்பதாக கூறி கடத்திச்சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதனால் 'போக்சோ' சட்டத்தில், மணிகண்டன், கவுதம் மீது வழக்குப்பதிந்து, நேற்று இருவரையும் கைது செய்தனர்.