உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உற்பத்தி முடியாததால் வழங்க முடியவில்லை

உற்பத்தி முடியாததால் வழங்க முடியவில்லை

ஈரோடு மாவட்ட நெசவாளர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் கூறியதாவது:பொங்கல் பண்டிகையின்போது, இலவசமாக கார்டுதாரர்களுக்கு வழங்க, இந்தாண்டு, 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள், 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. முழுமையாக நிதி ஒதுக்காததால், கடந்த செப்டம்பர் இறுதியில் பணி துவங்கியது. ஆனாலும் நுால் வர தாமதமானதால், அக்டோபர் இறுதியில்தான் பணி முழுமையாக துவங்கியது. தற்போதைய நிலையில், 60 முதல், 62 சதவீத சேலை உற்பத்தி நிறைவு பெற்றுள்ளது. 90 சதவீத வேட்டி உற்பத்தி செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும், 10 நாட்களில் வேட்டி உற்பத்தி பணி முற்றிலும் முடிந்து, அதற்கடுத்த, 3 நாட்களுக்குள் அனுப்பப்படும். ஆனால், இலவச சேலை உற்பத்தி பணி, பிப்ரவரி முதல் வாரம் வரை நடந்து, இரண்டாம் வாரத்தில் தரம் பார்த்து, பிரித்து அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.வேட்டி, சேலை உற்பத்தி முழுமையாக முடிக்கப்படாததால், தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு முழுமையாக வேட்டி, சேலை வழங்க முடியவில்லை. அதனால் ரேஷன் கடைகளில் சிலருக்கு சேலை, சிலருக்கு வேட்டி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை