உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் மீட்கப்பட்ட சித்தப்பா சடலம் சொத்தை அபகரிக்க கொன்ற அண்ணன் மகன்

கிணற்றில் மீட்கப்பட்ட சித்தப்பா சடலம் சொத்தை அபகரிக்க கொன்ற அண்ணன் மகன்

இடைப்பாடி, சொத்தை அபகரிக்கும் நோக்கில், சித்தப்பாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, கிணற்றில் வீசிய அண்ணன் மகனை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே முண்டாச்சியூர் காட்டுவளவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 47. திருமணம் ஆகாத இவர், கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். அருகே முப்பனுாரில், அக்கா பொன்னுதாயி, 60, வீட்டில் சாப்பிட்டு வந்தார். அவர், நேற்று முன்தினம் சாப்பிட வராததால், பொன்னுதாயி பல்வேறு இடங்களில் தேடியபோது, கள்ளுக்கடையில் உள்ள சுரேந்தருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சடலமாக கிடந்தது தெரியவந்தது. பூலாம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ராமச்சந்தின், அவரது அண்ணன் ராஜமாணிக்கத்துக்கு, தலா ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராஜமாணிக்கம் ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது மகன் பிரகாஷ், 34, அவற்றை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். தற்போது சித்தப்பாவான ராமச்சந்திரனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். ராமச்சந்திரனுக்கு திருமணம் ஆகாததால் அவரது நிலத்தை, சகோதரிகள் இருவருக்கு பாதி எழுதி கொடுத்துவிட்டு, மீதியை விற்று பணத்தை வைத்து கொள்வதாக கூறி வந்தார்.இதனால் பிரகாஷ், சித்தப்பா சொத்தை அபகரிக்க திட்டமிட்டு, கடந்த, 26ல் ராமச்சந்திரனை, கள்ளுக்கடை பகுதிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி கொடுத்தார். பின் விவசாய கிணற்றுக்கு அழைத்துச்சென்று, இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கி கொன்றுள்ளார். தொடர்ந்து கிணற்றில் தள்ளிவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகமாடியது தெரியவந்தது. பிரகாைஷ, நேற்று கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ