வாசன் பிறந்தநாள் சமபந்தி விருந்து
வாசன் பிறந்தநாள்சமபந்தி விருந்துஓமலுார், டிச. 29-த.மா.கா., தலைவர் வாசன், 60வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சி சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் சமபந்தி விருந்து நேற்று நடந்தது. 10ம் ஆண்டாக நடந்த நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், சமபந்தியை தொடங்கி வைத்தார். மக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.இதில் ஓமலுார் நகர தலைவர் மணிகண்டன், சங்ககிரி, இடைப்பாடி தொகுதி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்றனர்.அதேபோல் கருப்பூர் நகர த.மா.கா., சார்பில், கந்தசாமி கோவிலில் வாசன் பெயருக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஓமலுார் வடக்கு வட்டாரத் தலைவர் அய்யண்ணன் தலைமையில், மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.