தி.மு.க.,வை கண்டித்து வி.சி.க., ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில், தி.மு.க.,வை கண்டித்து, வி.சி.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர் செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார். புதுக்-கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத தி.மு.க.,அரசை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்-றவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசை கண்-டித்தும், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். வடக்கு மாவட்ட செயலர் மொழி அரசு, மண்டல செயலர் இமயவர்மன், தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.