வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்
சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க, பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவாவில்(வாஸ்கோடகமா) இருந்து, ஆக., 27 மற்றும் செப்., 1, 6 இரவு, 9:55க்கு புறப்படும் ரயில், 3 நாட்களுக்கு பின், வேளாங்கண்ணிக்கு, அதிகாலை, 3:45 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்க ரயில் வேளாங்கண்ணியில், ஆக., 29, செப்., 3, 8 இரவு, 11:55க்கு புறப்பட்டு, 3 நாட்களுக்கு பின், கோவாவுக்கு அதிகாலை, 3:00 மணிக்கு சென்று சேரும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது