வேல்முருகன், ரங்கநாதர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ஓமலுார்: ஓமலுார், திண்டமங்கலம், ஓம்கார மலையில் வேல்முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதன் மூலஸ்தன கோபுரத்தில், 18 அடியில் விஸ்வரூப தரிசனத்தில் வேலுடன் முருகன் உள்ளார். அருகே, ரங்கநாத பெருமாள் கோவில் கட்டப்பட்டு, ஸ்ரீதேவி, மகாலட்சுமி, பிரம்மா, விஸ்வக் ேஸனர், ராமானுஜர், சக்கரத்-தாழ்வார், ஆண்டாள், தன்வந்திரி, கருடாழ்வார், ஆஞ்சநேயர் சுவாமிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி கட்டப்பட்ட இக்கோவில்களில் நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது.முதலில், யாக சாலையில் இருந்து புறப்பட்ட கும்பங்கள், மலையின் இரண்டாவது வளைவில் உள்ள கடம்பன், விநாயகர் கோவிலுக்கு பூஜை நடத்தி, பின் வேல்முருகன் மூலஸ்தன கோபு-ரத்துக்கு, காலை, 10:05 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்-பாபிேஷகம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள், 'அரோ-கரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர்.அதேநேரம், ரங்கநாதர் பெருமாள் மூலஸ்தான கோபுரம், பரிவார தெய்வங்கள், கொடி மரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, 'டிரோன்' மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்-பட்டது. பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்-னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.