| ADDED : ஏப் 18, 2024 07:12 AM
தலைவாசல் : தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமசேஷபுரத்தில், நேற்று மாலை, 6:00 மணிக்கு தி.மு.க.,வினர் வீடுதோறும் சென்று மொபட்டில் மூட்டைகளில் எடுத்துவந்த, வேட்டி, சேலைகளை, வாக்காளர்களிடம் கொடுத்தனர். சார்வாய்புதுார் ஊராட்சி சம்பேரியிலும், தி.மு.க.,வினர், வாக்காளர்களின் பட்டியலுடன் வீடுதோறும் சென்று தலா, 400 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேபோல் வீரகனுாரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியபோது, பறக்கும்படை அலுவலர் சந்திரசேகர் தலைமையில் குழுவினர் அங்கு சென்றனர். உடனே அவர்கள், மொபட்டை போட்டு தப்பி ஓடிவிட்டனர். மொபட்டை பறிமுதல் செய்து, வீரகனுார் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து கெங்கவல்லி தொகுதி, உதவி தேர்தல் அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ''வீடியோக்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.