உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாற்றுத்திறனாளி வீடு கட்ட துணைத்தலைவர் உதவி

மாற்றுத்திறனாளி வீடு கட்ட துணைத்தலைவர் உதவி

பனமரத்துப்பட்டி: மல்லுாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி நடராஜன், 59. முன்னாள் சர்க்கஸ் தொழிலாளியான இவர், தற்போது கூலி வேலை செய்கிறார். இவருக்கு மனைவி, இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அம்மன் காலனியில் உள்ள காலி இடத்தில் நடராஜன் வீடு கட்ட, நேற்று முன்தினம் பூமி பூஜை போட்டார். தொடர்ந்து அவருக்கு, மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார், 10,000 ரூபாய் நிதி உதவி அளித்தார்.இதுகுறித்து நடராஜன் கூறுகையில், ''வீட்டு வாடகை கொடுக்க முடிய வில்லை. மூத்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தேன். இளைய மகள், என்னை போன்று மாற்றுத்திறனாளி. துணைத்தலைவர் அய்யனார், அம்மன் காலனியில், குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்ட இடம் ஒதுக்கிக்கொடுத்தார். தொடர்ந்து அங்கிருந்த பாறைகளை அகற்றி சுத்தம் செய்து தந்தார். தற்போது நிதி உதவி செய்தார். தவிர மணல், ஹாலோ பிளாக் கல் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களுக்கு தேவையான பொருட்களை செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை