உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொதுச்செயலரை வரவேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

பொதுச்செயலரை வரவேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

பனமரத்துப்பட்டி: வீரபாண்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜமுத்து வெளியிட்ட அறிக்கை:வீரபாண்டி சட்டசபை தொகுதி, வீரபாண்டி ஒன்றியத்தில் இன்று நடைபெறும் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பொதுச்செயலாளர் பழனிசாமி, காலை, 9:30 மணிக்கு வருகிறார். தொண்டர்களுடன் பொங்கல் விழா கொண்டாடி, நலத்திட்ட உத-வி கள் வழங்குகிறார்.சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சேலம் ஒன்றிய செய-லாளர்கள் பங்கேற்கின்றனர். பொதுச்செயலாளரை வரவேற்க மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வா-கிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ