உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,478 கனஅடியாக நீர்வரத்து உயர்வு

1,478 கனஅடியாக நீர்வரத்து உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 3ல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 818 கனஅடி நீர் வந்தது. பின் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து காவிரி உபரிநீர் பெருக்கெடுத்ததால், ஜூலை, 30ல் அணை நிரம்பியது. ஜூலை, 3க்கு பின் குறைந்தபட்சமாக நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 747 கனஅடி நீர் வந்தது. 3 மாதங்களுக்கு பின் அணை நீர்வரத்து வெகுவாக சரிந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 1,478 கனஅடி-யாக சற்று அதிகரித்தது. மேலும் அணை நீர்மட்டம், 103.64 அடி, நீர் இருப்பு, 69.64 டி.எம்.சி.,யாக சரிந்தது. ஒரே நாளில் நீர்-மட்டம், 1 அடி, நீர்இருப்பு, 2 டி.எம்.சி., சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை