உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரியகோவில் அணையில் பழைய பாசனத்துக்கு நீர் திறப்பு

கரியகோவில் அணையில் பழைய பாசனத்துக்கு நீர் திறப்பு

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பாப்பநாயக்கன்பட்டியில், 52.59 அடி உயரத்தில், 190 மில்லியன் கன அடி நீர் தேங்கும்படி, கரியகோவில் அணை உள்ளது.அதில் நேற்று, 50.59 அடி உயரத்தில் நீர் தேங்கி இருந்தது. அரசாணைப்படி, பழைய பாசன பகுதிகளுக்கு, தலைமை மதகு வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு, 108 கன அடி வீதம், 10 நாட்களுக்கு, 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறந்து விடப்படுகிறது.இதனால் ஆற்றுப்படுகை கிராம மக்கள், நேரடி ஆறு, ஏரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தேன்மொழி, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ஜெயக்குமார், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் சுகந்தன், சண்முகம், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ