உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வந்த முதல்வர் அமைச்சர் வரவேற்பு

சேலம் வந்த முதல்வர் அமைச்சர் வரவேற்பு

சேலம் வந்த முதல்வர்அமைச்சர் வரவேற்புஓமலுார், அக். 23-நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் வந்தார். அவருடன் அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோரும் வந்தனர். விமான நிலையத்தில் முதல்வரை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் வரவேற்றனர்.தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் வரவேற்றனர். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி., பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின் காரில் நாமக்கல் நோக்கி புறப்பட்ட முதல்வருக்கு, விமான நிலைய வாசலில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி