மேலும் செய்திகள்
ஷீரடி சாய்பாபா பாதுகை 19, 20ல் தரிசிக்க ஏற்பாடு
13-Apr-2025
சேலம்:சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட், சேலம் சீரடி சாய் நண்பர் குழு சார்பில், சேலத்தில் சாய்பாபா பாதுகை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை, 6:30 முதல் இரவு, 9:30 மணி வரை, 3 ரோடு வரலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு, பாதுகை வைக்கப்படுகிறது. இதனால் சீரடியில் இருந்து சிறப்பு வாகனத்தில் சேலம் வந்த சாய்பாபாவின் பாதுகைக்கு நேற்று மாலை, புது பஸ் ஸ்டாண்ட் அருகே சீரடி சாய் நண்பர் குழு, திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்து, பஜனை பாடியபடி ஊர்வலமாக, மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
13-Apr-2025