ரூ.2.18 கோடியில் 40 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
சேலம்: சேலம் காந்தி மைதானத்தில், குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து போலீசாரின் அணி-வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய, 120 பேருக்கு, முதல்வரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. பல்-வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 453 அலுவலர்க-ளுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட, 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை சேர்ந்த, 26 ஆசிரியர்கள், 6 மருத்துவர்கள், தேசிய, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, 29 பேர், 9 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 22 உறுப்பினர்களுக்கு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்-பட்டன. சுதந்திர போராட்டம் மற்றும் மொழிப்போர் தியாகி-களின் வாரிசுதாரர்கள், எல்லை போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்-களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. பள்ளி கல்வி துறை சார்பில், 1,250 மாணவ, மாணவியரின், கலைநிகழ்ச்சி நடந்தது. மேலும் பல்வேறு துறைகள் சார்பில், 40 பயனாளிகளுக்கு, 2.18 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டன. மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., கவுதம் கோயல் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் பங்கேற்றனர்.சேலம் மாநகராட்சியில், கமிஷனர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து போலீ-சாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, காந்தி படத்துக்கு மலர் துாவி, வண்ண பலுான்களை பறக்கவிட்டார். இதையடுத்து, 20 ஆண்டுகள் பணியாற்றிய டிரைவர், பணியாளர்களுக்கு தங்கப்ப-தக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த தனித்திறமை, பொது சேவை புரிந்தவர்களுக்கு, சான்றிதழ், கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் பங்-கேற்றனர்.