நலத்திட்ட உதவி; 436 பேருக்கு வழங்கல்
ஆத்துார்: ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, வளையமாதேவி, கல்லாநத்தம், அம்மம்பாளையம் கிராமங்களில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், 68.42 லட்சம் ரூபாயில், 436 பேருக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும், 15 துறைகள் சார்பில் அமைத்திருந்த சேவை மையங்களில், 1,372 மனுக்கள் பெறப்பட்டன. அதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சர் உத்தரவிட்டார். கலெக்டர் பிருந்தாதேவி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்னதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.