போலீசில் புகார் செய்ய வாட்ஸாப் எண் அறிமுகம்
வீரபாண்டி: சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள், விபத்து, பாதுகாப்பு, புகார் அளிப்பது உள்ளிட்ட உதவிகளை, மக்கள் இருந்த இடத்தில் இருந்தே பதிவு செய்யும்படி, 'வாட்ஸாப்' எண் அறிமுகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, 94981 00976 என்ற வாட்ஸாப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் மக்கள், அவரவர் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிவோர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் மக்கள், முதிேயார் மட்டும் தனியே வசிக்கும் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு, வாட்ஸாப் எண்ணில், பெயர் விபரங்களை எழுத்துகளாகவும், எழுத, படிக்க தெரியாதவர்கள் குரல் பதிவாகவும், இருப்பிடம்(கூகுள் லொகேஷன்) உடன் பதிவு செய்யலாம். தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்பட்டு, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பர். இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளும் கண்காணிப்பர் என, போலீசார் தெரிவித்தனர்.