உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆண்டுக்கு ரூ.15,000 தமிழக அரசு வழங்குமா

ஆண்டுக்கு ரூ.15,000 தமிழக அரசு வழங்குமா

சேலம், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க, சேலம் மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில், நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய கோரிக்கை மனு விபரம்:தமிழகத்தில் உத்தேசமாக, 50 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகன ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான மீட்டர் கட்டணம் கடந்த, 15 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. மேலும் ஓலா, உபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆட்டோ தொழில் நலிவடைந்து அதன் ஓட்டுனர் குடும்பங்கள் வறுமையில் வாழுகின்றன. ஆந்திர மாநிலத்தில் சேவை திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல, தமிழக அரசும் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !