உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊதிய முரண்பாடு களையப்படுமா?

ஊதிய முரண்பாடு களையப்படுமா?

சேலம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால் எங்களுக்கும், அடுத்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்,'' என்றார். மாவட்ட செயலர் பிரசாத், பொருளாளர் மரியசந்தோசம், துணைத்தலைவர் கலையரசன், துணை செயலர் செந்தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ