மேலும் செய்திகள்
பைக் மோதிதொழிலாளி பலி
19-Apr-2025
வாழப்பாடி:வாழப்பாடி, மேட்டுப்பட்டிபுதுாரை சேர்ந்தவர் பிரபு, 38. இவரது அக்கா ராதா, 48. இவர் கணவர் முருகேசன், 51. இவர்கள், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பட்டி பவர் ஆபீஸ் அருகே, 'எக்ஸல் ஹெவி டூட்டி' மொபட்டில் நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் பிரபு ஓட்டினார். அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், மொபட் பின்புறம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பிரபு, ராதா, முருகேசன் ஆகியோரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு ராதா, நேற்று உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை பார்வையிட்டு கார் டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.
19-Apr-2025