உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டயர் பஞ்சராகி மொபட்டில் இருந்து விழுந்த பெண் பலி

டயர் பஞ்சராகி மொபட்டில் இருந்து விழுந்த பெண் பலி

ஓமலுார் : சேலம், பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அய்யந்துரை, 42. சேலத்தில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியில், கலெக்சன் ஏஜன்டாக பணிபுரிகிறார். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று கவிதா, அவரது மைத்துனர் பிரபாகரனுடன், 'யமஹா ரே' மொபட்டில் அமர்ந்து கொண்டு, இரு குழந்தைகளுடன் தாய் வீடான ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டிக்கு புறப்பட்டார். மதியம், 1:00 மணிக்கு சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அண்ணமார் ஓட்டல் அருகே வந்தபோது, மொபட் டயர் பஞ்சரானது. இதில் நிலை தடுமாறி விழுந்த கவிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். அய்யந்துரை புகார்படி ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ