உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாம்பு தீண்டி பெண் பலி

பாம்பு தீண்டி பெண் பலி

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி ஊராட்சி நெய்யம-லையை சேர்ந்த, ராதாகிருஷ்ணன் மனைவி நாச்சியம்மாள், 25. இருவரும் இடையப்பட்டி புதுார் அருகே கத்திரிப்பட்டி பிரிவு சாலையில் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை மேற்கொண்டனர். கடந்த, 3 நள்ளிரவு, 1:00 மணிக்கு, வீட்டில் நாச்சியம்மாள் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கட்-டுவிரியன் பாம்பு தீண்டியது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ