உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

பெத்தநாயக்கன்பாளையம்: சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது, கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.திருவண்ணாமலை, அண்ணா நகரை சேர்ந்த திருமலை மனைவி ராஜலட்சுமி, 30. இவர், நேற்று முன்தினம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்கு, தனது நான்கு வயது மகள் சாதனாவுடன் வந்துள்ளார். இரவு, 7:50 மணி-யளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது, ஆத்துாரில் இருந்து, சேலம் நோக்கி சென்ற, பென்ஸ் கார் மோதியது. இதில் ராஜலட்சுமி, அவரது நான்கு வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டனர். இதில் ராஜலட்சுமி உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, சங்ககிரியை சேர்ந்த, கார் ஓட்டி வந்த டிரைவர் பரத்விஷ்ணு, 38, மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை