உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்த பெண்கள்

வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்த பெண்கள்

சேலம்,ஆடி கடைசியில் வரும் வளர்பிறை வெள்ளி, வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பர். இது மகா லட்சுமியின் பல விரதங்களில் மிக முக்கியமானது. இதனால் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்வர். குறிப்பாக திருமண தடை, மாங்கல்ய பலம் உள்ளிட்ட வேண்டுதல் வைத்து பூஜை செய்வர்.அதன்படி இன்று வரலட்சுமி விரத பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு நேற்று காலை முதலே, சின்னக்கடை வீதி, வ.உ.சி., மார்க்கெட் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விரதத்துக்கு தேவையான பொருட்களை வாங்க, பெண்கள் கூட்டம் அலைமோதியது, குறிப்பாக வரலட்சுமி நோன்பு கயிறு, லட்சுமி முகம், மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, ஜாக்கெட், வாழை மரம், லட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கினர். மேலும் பூக்கள் வாங்கவும், மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி