போதையில் நண்பரை தாக்கிய தொழிலாளி கைது
மேட்டூர்: குடி போதையில், நண்பரை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன், 47. இவரது நண்பர்கள் சக கூலி தொழிலாளிகள் வெங்கடேஷ், 45, கனகராஜ், 47. இருவரும் மேட்டூர் அடுத்த கோனுார், ஆண்டிக்கரையில் வசிக்கின்றனர். முருகனுக்கு குடிபழக்கம் உண்டு. நேற்று முன்தினம் முருகன், அவரது சக தொழிலாளர்கள் வெங்கடேஷ், கனகராஜை பார்க்க ஆண்டிக்கரை சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு முருகன், கனகராஜ் இருவரும் மது அருந்தி விட்டு ஆண்டிக்கரையில் துாங்-கியுள்ளனர். நள்ளிரவு, 1:00 மணிக்கு திடீரென கனகராஜ், எதற்-காக எனது அம்மாவை திட்டினாய் எனக்கூறி, முருகனை விறகு கட்டையால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த முருகன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த கருமலைக்கூடல் போலீசார், நேற்று கனகராஜை கைது செய்தனர்.