உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்மன் தாலியை திருடிய தொழிலாளி கைது

அம்மன் தாலியை திருடிய தொழிலாளி கைது

தாரமங்கலம், தாரமங்கலம் அருகே கரிய பெருமாள் கோவில் அடிவாரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 60. அதே பகுதியில் ஆதிபராசக்தி கோவில் அமைத்து பூஜை செய்கிறார். கடந்த நவ., 4ல் பவுர்ணமி பூஜை செய்தபோது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த, 10 கிராம் தாலி இருந்தது. 19ல் தாலியை காணவில்லை. சரஸ்வதி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, வேடுகாத்தம்பட்டியை சேர்ந்த மூட்டை துாக்கும் தொழிலாளி ராமகிருஷ்ணன், 48 என்பவரை நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தாரமங்கலம், தொளசம்பட்டி பிரிவு சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில், ராமகிருஷ்ணன் என்பதும், சுவாமி தாலி திருடியதும் தெரிந்தது. தாலியை மீட்டுள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ