மேலும் செய்திகள்
வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
30-May-2025
மேட்டூர்: மேச்சேரி, அரங்கனுார் ஊராட்சி பொம்மியம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி கோடீஸ்வரன், 40. இவரது மனைவி கோகிலா, 39. இவர்களது மகள் விஜித்ரா, 21, மகன் தனுஷ், 18. அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, கோடீஸ்வரன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.கடந்த, 25 இரவு, மனைவி சமைத்துக்கொண்டிருந்தபோது, அவரை கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். கோகிலா குச்சியால், கொடுவாளை தட்டியுள்ளார்.அப்போது குச்சி, கோடீஸ்வரன் வயிற்றில் பட்டுள்ளது. இந்நிலையில், 27ல் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரனை, கோகிலா, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோடீஸ்வரனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் நேற்று காலை, 10:30 மணிக்கு அவர் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
30-May-2025