மேலும் செய்திகள்
டாக்டர், செவிலியர்கள் தர்ணா
11-Jul-2025
ஏற்காடு, ஏற்காடு அருகே, மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான பாம்பு கல் என்னும் தோட்டம் உள்ளது. இங்கு கரியகோவில் கல்லுார் பகுதியை சேர்ந்த ஆண்டி, 60, அவரது மனைவி தீத்தி ஆகியோர் தங்கி தோட்ட வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை ஆண்டி வழக்கம் போல, ஒரு மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.சக தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் சேகருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மயக்க நிலையில் இருந்த ஆண்டியை காரில் ஏற்றி, ஏற்காட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எதிரே 108 ஆம்புலன்ஸ் வருவதை பார்த்த சேகர், ஆண்டியை ஆம்புலன்ஸில் ஏற்ற காரை நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்த ஆண்டியை, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார், ஆண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
11-Jul-2025