உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த தொழிலாளி மீட்பு

கிணற்றில் விழுந்த தொழிலாளி மீட்பு

மேட்டூர்: கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய தொழிலாளியை, தீயணைப்பு மீட்பு குழுவினர் மீட்டனர்.மேட்டூர், சாம்பள்ளி ஊராட்சி, மாசிலாபாளையம் கூலி தொழிலாளி ரவி, 51. இவர் நேற்று காலை, கொளத்துார் அடுத்த குரும்பனுார் குவாரி உரிமையாளரான வினோத்குமார் காட்டுக்கு வேலைக்கு சென்றார். மதியம், 1:00 மணியளவில் அங்குள்ள, 60 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.கிணற்றில், 10 அடி உயரம் தண்ணீர் இருந்தது. அதில் ரவி தத்தளித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மீட்பு குழுவினர், சம்பவ இடத்துக்கு சென்று ரவியை கயிறு கட்டி காயம் எதுவும் இன்றி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை