உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனியால் அரளி தொழிலாளர் அவதி

பனியால் அரளி தொழிலாளர் அவதி

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில் பல்வேறு வகை அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி, 15,௦௦௦ தொழிலாளர்கள் உள்ளனர். தினமும் அதிகாலை, 2:00 மணி முதல் செடியில் இருந்து அரளி மொக்கு பறிக்கும் பணியில், தொழிலாளர்கள், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.இதில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி, அடிமலைப்பட்டி, குரால்நத்தம், திப்பம்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளன. சில நாட்களாக புயல் மழையால், குளிர் காற்று வீசியது. மழை நின்ற பின், பனி கொட்ட தொடங்கியுள்ளது.மாலை, 5:00 முதல் காலை 8:00 மணி வரையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் அதிகாலையில் அரளி மொக்கு பறிக்க தொழிலாளர்கள் செல்வதில்லை. வருவாய் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. கூலியை நம்பி உள்ள தொழிலாளர்கள் பனியில் மொக்கு பறிக்க செல்கின்றனர். அவர்கள் சளி, இருமல், தலைபாரம், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கின்றனர். மார்கழி, தை முழுதும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ