உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உலக அரிவாள் செல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக அரிவாள் செல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் : சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செஞ்சுருள் சங்கம், இளம் இந்தியர்கள் அமைப்பு, 'அரிவாள் செல் நோய்' குறித்தும், அதனால் மரபணு ரீதியாக ரத்தத்தில் ஏற்படும் பிரச்னை, அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி உலக அரிவாள் செல் தினத்தை, அனுசரித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி ரவீந்தரன், அரிவாள் செல் நோய், அதனால் ஏற்படும் பாதிப்பு, சிகிச்சை முறை குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக்ராஜா, கிருத்திகா, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், இளம் இந்தியர்கள் அமைப்பின் உறுப்பினர் ராகுல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ