மேலும் செய்திகள்
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அரசு ஐ.டி.ஐ.,
15-Oct-2025
சேலம், :மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், பவர் தையல் இயந்திரம் இயக்குதல், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வித்தகுதி, 8ம் வகுப்பு, அதற்கு மேல் படித்த, 40 வயதுக்குட்பட்ட பெண்கள் பயிற்சி பெறலாம். தினமும் காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை என, 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். அதற்கு கல்வி, ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படத்துடன், நவ., 5க்குள், 'சிட்ரா விசைத்தறி பணி மையம், 477/158, திருச்சி பிரதான சாலை, குகை, சேலம் - 6' என்ற முகவரிக்கு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். தகவலுக்கு, 0427 - 2219486, 98438 - 85587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சேலம் குகை சிட்ரா விசைத்தறி பணி மைய பொறுப்பாளர் குமார் தெரிவித்துள்ளார்.
15-Oct-2025