உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

கெங்கவல்லி, திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மோகனசரிதா அறிக்கை: கெங்கவல்லி வட்டார விவசாயிகள், சம்பா பருவத்தில் திருந்திய நெல் சாகுபடியில் புது உத்தியை கடைப்பிடித்து நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, தமிழக அரசு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருது, மாநில அளவில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய், 7,000 ரூபாய் மதிப்பில் பதக்கம் வழங்கக்படும். இந்த பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க, குறைந்தபட்சம், 2 ஏக்கர் திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, 3 ஆண்டுகள் நெல் சாகுபடி செய்து முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை பயிரிட வேண்டும். இதற்கு பதிவு கட்டணம், 150 ரூபாய். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் சங்ககிரி தாலுகா விவசாயிகள், திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவோர், நாராயணசாமி நாயுடு விருது பெற விண்ணப்பிக்க வேண்டும் என, சங்ககிரி வேளாண் உதவி இயக்குனர் விமலா(பொ) கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ