உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் இளந்தலைவர் மாரத்தான் போட்டி

வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் இளந்தலைவர் மாரத்தான் போட்டி

சேலம்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சார்பில், அரியானுாரில் நேற்று, 'இளந்தலைவர் மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டது. டாக்டர் எழில்வேந்தன், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் கிருபாகரன், இளைஞரணி செயலர் மணிகண்டன், விளையாட்டு பிரிவு ரமேஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைவர் ரத்தினவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஆண்களுக்கு, 2, 5, 8, 20 கி.மீ., பெண்களுக்கு, 2, 5, 6, 8 கி.மீ., ஆகிய பிரிவுகளில் போட்டி நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், மக்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, மாநில இளைஞரணி துணை செயலர் ஆனந்த் ஆகியோர், விருது, சான்றிதழ்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, வீரபாண்டி தெற்கு ஒன்றிய செயலர் வெண்ணிலா செய்திருந்தார். டாக்டர் தருண், ஆறுமுகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ