மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி சாவு; போலீசார் விசாரணை
11-Jun-2025
சேலம், சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி, முனியப்பன் கோவில் பின்புற பகுதியில், புட்செல் போலீசார், நேற்று முன்தினம் மாலை சோதனை செய்தனர். அங்கு தலா, 50 கிலோவில், 22 பைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அரிசியை பதுக்கியது, கொண்டலாம்பட்டி, கண்டக்டர் ராஜூ தெருவை சேர்ந்த மணிகண்டன் என தெரிந்தது. போலீசார் விசாரிப்பதை அறிந்து, மணிகண்டன் தலைமறைவானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை தேடுகின்றனர்.போலீசார் கூறுகையில், 'ஏற்கனவே நாமக்கல்லில், சரக்கு வாகனத்தில், 1,320 கிலோ ரேஷன் அரிசி கடத்திய சம்பவத்தில், அந்த மாவட்ட புட்செல் போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த மணிகண்டன், 10 நாட்களாக வரவில்லை. அவருக்கு தந்தை ஆறுமுகம் உடந்தையாக இருந்ததால், தந்தை, மகனை தேடி வருகிறோம்' என்றனர்.
11-Jun-2025