உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ஓமலுார்: தொளசம்பட்டி, ராமகிருஷ்ணனுாரை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன், 30. திருமணமாகவில்லை. தந்தை செய்து வரும் இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் வேலையை, மணிகண்டனும் செய்து வந்தார். தொளசம்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள கடையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு மணிகண்டன் வாட்டர் சர்வீஸ் செய்ய, 'பிளக்'கை மாட்டியபோது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டார் என தெரிவித்தனர். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ