உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடியில் தொடரும் நெரிசல்: 10க்கும் குறைவான போக்குவரத்து போலீசார்

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடியில் தொடரும் நெரிசல்: 10க்கும் குறைவான போக்குவரத்து போலீசார்

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் வாகன எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் நெரிசல் தொடர்கிறது.காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரின் நுழைவு வாயிலான பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ்ட் பீட்,செகண்ட் பீட், கல்லுக்கட்டி, செக்காலை, வ.உ.சி., ஈரோடு,கழனி வாசல், பர்மா காலனி உட்பட பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.போக்குவரத்தை சரி செய்ய பல இடங்களிலும் சிக்னல் இருந்தும் போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால் பல சிக்னல் பயன்பாடின்றி கிடக்கிறது. 22 போக்குவரத்து போலீசார் இருந்த நிலையில் தற்போது 9 பேர் மட்டுமே உள்ளனர். இதில், ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு எஸ். ஐ.,போக 7 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் சிலர் பந்தோபஸ்து, அலுவலக பணிக்காக வெளியூருக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் ஒரு சில போலீசாரே பணியில் உள்ளனர்.2 லட்சம் மக்கள் தொகை உள்ள காரைக்குடி பகுதியில் 10க்கும் குறைவான போக்குவரத்து போலீசாரே இருப்பதால் போக்குவரத்து சிக்கல் தொடர்கதையாகி வருகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய முடியாத நிலை உருவாவதோடு, அடிக்கடி விபத்தும், வாகன ஓட்டிகள் இடையே தகராறும் ஏற்படுகிறது. எனவே, விபத்து, உயிரிழப்புகளை தடுக்க போதிய போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை