உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் நீதிமன்றத்தில் 1297 வழக்குகள் தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 1297 வழக்குகள் தீர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1297 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 4 கோடியே 97 லட்சம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி செல்வம், வழக்கறிஞர்கள் அந்தோணி ஜெயராஜ், வல்மிகநாதன், பாண்டி கண்ணன், கண்ணன் ராஜதீர்த்தம் வழக்குகளை விசாரித்தனர்.102 குற்றவியல் வழக்கு, 252 காசோலை மோசடி வழக்கு, 372 வங்கிக் கடன் வழக்கு, 335 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, 166 குடும்பப்பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கு, 518 சிவில் வழக்கு, 383 வழக்குகள் என மொத்தம் 2128 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,222 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 048 வழக்காடிகளுக்கு கிடைத்தது. வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 1564 வழக்குகள் பிரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 175 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 8 லட்சத்து 73 ஆயிரத்து 603 வரை வங்கிகளுக்கு வரவானது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !