உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேன் - கார் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

வேன் - கார் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தேவகோட்டை:மலேஷியாவைச் சேர்ந்த தமிழர் குடும்பத்தினர் பிரகாஷ் என்பவர் தலைமையில், 12 பேர் மதுரை சுற்றுலா வேனில் ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்து விட்டு, ராமேஸ்வரம் --- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சிக்கு நேற்று மதியம் புறப்பட்டனர். மதுரை ஆனையூர் கந்தையா, 40, வேனை ஓட்டினார்.தஞ்சாவூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் பவுல் டேனியல், 38, தன் மகள்கள் சூசன் ரேமா, 10, ஹெலன் சாமா, 7. சித்தப்பா மைக்கேல், 63, ஆகியோருடன் தேவகோட்டை அருகே ஆண்டாவூரணி மணலுார் கிராமத்தில் உறவினர் வீட்டில் இன்று நடக்கவுள்ள விசேஷத்தில் பங்கேற்க காரில் வந்தனர். காரை பவுல் டேனியல் ஓட்டினார்.தேவக்கோட்டை புறவழிச்சாலையில் மார்க்கண்டேயன்பட்டி விலக்கு பாலம் அருகே நேற்று மதியம், 12:00 மணிக்கு வந்த போது, கார், வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.வேனில் வந்த டிரைவர் கந்தையா, 40, உட்பட 13 பேர் படுகாயமடைந்து, காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை