உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 4 பேர் கைது

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 4 பேர் கைது

சிவகங்கை : மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.திருப்புத்துார் மகளிர் ஸ்டேஷனில் ஜன.,11ல் பிள்ளையார்பட்டி வேதாச்சலம் மகன் கற்பகமூர்த்தி 37,யை போக்சோ வழக்கில் கைது செய்தனர். சாக்கோட்டை போலீசார் ஜன., 10 அன்று கரூர் மாவட்டம், வெங்கன்மேடு பாபு மகன் கவின் 20, என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். தேவகோட்டை மகளிர் போலீசார் காரைக்குடி வைரவபுரம் சின்னத்தம்பி மகன் பாண்டி 38,யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதே போன்று பள்ளத்துார் போலீசார் ஜன., 13 அன்று மதுக்கடையில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய ராஜசேகர் மகன் ராஜேஸ் பாண்டியை 24, கைது செய்தனர். தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் 4 பேர்களையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின்பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !