உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோவிலுாரில் ஆடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவிலுாரில் ஆடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

காரைக்குடி : காரைக்குடி அருகே திருநெல்லையம்மன் உடனாகிய கொற்றாளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிலுார் திருநெல்லையம்மன் உடனாகிய கொற்றாளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நேற்று காலை, திருவிழாவை முன்னிட்டு திருநெல்லையம்மனுக்கு காப்புகட்டுதல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, தினமும் அம்மன், காமதேனு, சிம்ம, கைலாய, அன்னம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.8ம் தேதியும் ஆக.9ம் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை